Friday 24 July 2009

மழை....



மனதைத் தாலாட்டும்
இயற்கையின் இன்பம் நீ......

மகிழ்வான சிறுவயதின்
என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ.....

சிறுவனாய் நான்.....

விளையாடி வரும்போது
வெப்பமாகும் என் தேகம்.....
மேலிருந்து நீ வந்து வந்து
குளிரவைப்பாய் என் தேகம்....
என் சூடான சுவாசமும்
சில்லென்று குளிர்ந்துவிடும்....
அதை இன்றும் நினைத்தாலும்
ஜில்லென்று சுகம் தரும்....

இளைஞனாய் நான்......

தெருவோரம் அமர்ந்து
தேடுவேன் என் பேரழகை....
திடீரென்று நீ வருவாய்
சினத்தையும் நீ தருவாய்.....

அந்த நேரம் என்
அழகுச்சிலை வருவாள்...
நீ துளிகளாய் அவள் முகத்தினிலே
தொட்டதுமே ஒட்டிடுவாய்....
ஒட்டிய துளியொன்று
அவள் மூக்குவளி இறங்கிவந்து
அவள் மேல் உதட்டை தொட்டுவிட....
அவள் அதை உள்ளிழுத்து
என் பக்கமாய் ஊதிவிட....
அப்போது அவள்
உதடுசொல்லும் ஜாலத்தில்
என்னுயிரைக் கொடுத்தவன் நான்....
அந்த மொழியை இன்றுவரை
என் இதயத்தில் ரசிப்பவன் நான்........
அதனாலே இன்றுவரை உன்னை
ரசிக்கும் கலைஞன் நான்.....

ஆனால் உன்னை எனக்கு
இப்பொது ஓரளவும் பிடிக்கவில்லை...

ஏனென்று கேட்காதே
எப்படிப் பதில் சொல்வேன்....
ஏங்கி நிற்கும் நம் உறவுகளின்
எதிர்காலம் என் சொல்வேன்....

நம் அனைத்து உறவுகளும்
முகாமில் அடைந்திருக்க
அங்கே ஒரு நாளேனும் உன் வருகை
உன்னை அருவருக்க வைக்கிறது.....

அன்றோ நீ எங்கள்
அழகுக்கு அழகு தந்தாய்

இன்றோ நீ இங்கே
அசிங்கமெல்லாம் கூட்டிவந்து
எங்களை அவலப்படுத்துகிறாய்......

பல்லாயிரம் கிருமிகளை
நம் பாதங்களில் சேர்க்கின்றாய்....
படுக்கும் இரவினிலும்
நம்மை பாடாய் படுத்துகிறாய்....

உன் தொல்லை போதும்
நாம் அழைக்கும் வரை
வர வேண்டாம்.....
அழையாத விருந்தாளியாய்
எங்களுக்கு அவலத்தை
தர வேண்டாம்.....

இளங்கவி

5 comments:

  1. ...மழை வேண்டி அழைத்தது ஒரு காலம் மழை...வேண்டாம் நம் உறவுகளின் துன்பத்தை கூட்டாதே என்பது இக்காலம். காலங்கள் மாறும் தமிழ் அகதிகளின் காலம் மாறுமா ? .

    ReplyDelete
  2. நிலாமதி அக்காவுக்கு

    இயற்கைகூட இன்று தமிழனுக்கு எதிராக இருப்பது போன்ற ஓர் நிலை, இந்த துன்பங்க்களெல்லாம் விரைவில் மாறவேண்டும், தமிழருக்கு ஒர் நிம்மதியான வாழ்வு கிடைக்கவேண்டுமென்பதே எல்லோரினதும் ஆசை...

    ReplyDelete
  3. hello anna. my name is Janakan and i am currently studying at a university in Australia. i really like your poems. i love my tamil eelam and i would like to do more to my country and i would like to talk with you. so if you can can you please contact me on janakan.lingam@gmail.com. nanry anna.

    ReplyDelete
  4. ஜனகனுக்கு

    என் கவிதைகளை மிகவும் விரும்புவதாகச் சொன்னதற்கு என் நன்றிகள், நான் உங்கள் ஈமெயிலுக்கு தொடர்புகொண்டுள்ளேன், நீங்கள் நேரம் கிடைத்ததும் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள்.....

    ReplyDelete
  5. hi can u add mein web addy on ur sit?
    i will put ur in my websit thanks
    detail

    www.tamilpc.tk
    www.tamil1.tk



    thx
    webmaster

    ReplyDelete