Saturday 15 August 2009

செஞ்சோலைக் குயில்கள்.....


புலியின் கோட்டையிலே
பூத்த சிறுமலர்கள்.....

பொசுங்கி விட்ட பின்பும்
மனதில் பூத்து நிற்கும்
கொடி மலர்கள்....

அவர் செஞ்சோலையில் வளர்ந்த
சிரித்து நின்ற இளந்தளிர்கள்

செத்து நம் சரித்திரத்தில்
இடம்பிடித்த இளம் குயில்கள்....

வாழ்க்கையின் வசந்தத்தை
ஏக்கத்துடன் பார்த்திருந்த....
வெண்பனியில் தவண்டுவரும்
நம் ஈழத்துப் பென்குயின்கள்....

வணக்கத்துடன் சூரியன்
கிழக்குவாசல் வந்துவிட.....
செஞ்சோலைப் பூக்கலெல்லாம்
சிறிதாக மலர்ந்துவிட....
வளமையான பொழுதென்று
வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க....
வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று
தெரியாத தேவதைகள்......

மகிந்தவின் கட்டளைக்கு
எமன்கூட பயந்துகொண்டு
வாகனம் மாற்றி
ஏறுகிறான் கிஃபிரினிலே.....

செஞ்சோலைமேல் பறந்து
பூஞ்சோலையைக் கருக்க
போட்ட குண்டு நாலில்
பிணக்குவியல்கள் பல இடத்தில்....

உலகமே அன்று
வாய் பொத்தி நின்று பார்க்கிறது.....
நாம் அழுத அழுகுரல்கள்
நம் காதில் மட்டுமே கேட்கிறது....
அவர் பிணம் புதைக்கும் கல்லறைக்கோ
அவர் சாம்பல்தான் கிடைக்கிறது....
இதைப் பார்த்த தமிழினமோ
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிறது.....

விழித்திருந்தால் கண்ணீராய்.....
தூக்கத்திலே கனவுகளாய்.....
உணவுண்ணும் போதினிலே
தொண்டையில் சிக்கும் முள்ளுகளாய்....
உன் நினைவோ என்றென்றும்; நம்
நெஞ்சினிலே தைக்கிறது; இந்தக் ....
குஞ்சுகளை நினைத்துவிட்டால்
நம் உடம்பு பஞ்சாக எரிகிறது......

இளங்கவி

2 comments:

  1. உன் நினைவோ என்றென்றும்; நம்
    நெஞ்சினிலே தைக்கிறது; இந்தக் ....
    குஞ்சுகளை நினைத்துவிட்டால்
    நம் உடம்பு பஞ்சாக எரிகிறது....

    உள்ளத்தை தொடும் வரிகள் பாராடு இளங்கவி உங்களுக்கு. .

    ReplyDelete
  2. நிலா அக்காவுக்கு

    மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு....

    அன்று கருகிய அந்த மொட்டுக்களை நினைத்தால் எம் நெஞ்ச்சமே கருகிவிடுமல்லவா?

    ReplyDelete