Monday 31 August 2009

பாலைவன ரோஜா...

ஒரு தூய நட்புக்காக...

நம் வாழ்விழந்த சோகத்தில்
வாயடைத்து நின்றேன்......
அழியும் நம் இனத்துக்காய்
நடு வீதிக்கு சென்றேன்.....
அந்த தருணங்கள்
என் வாழ்வின் ரணங்களாய்.....
எப்போதும் சுட்டெரிக்கும்
பாலை வனங்களாய்........

அந்தப் பாலைவனத்தினிலே
சோககீதம் பாடும்
ஓர் சோலைக் குயிலாக.....
திசையேதும் தெரியாமல்
திசைமாறிப் பறக்கின்றேன்....

அந்த நெருப்பு மண்தரையில்
பட்டுவண்ண ரோஜாவொன்று.....
நட்பெனும் நிழல் தேடி
நான் பறக்கும் திசை நோக்கி
நட்புடன் சிரிக்கிறது....

சுட்டெரிக்கும் சூரியன்
விட்டெறியும் கதிர்களினால்....
தொட்டாலே தீப்பற்றும்
சுட்டெரிக்கும் மண் தரையில்......
வேரூன்றித் தவிக்கும்
அந்த அழகான பூச்செடிக்கு....
நட்பெனும் கரம் நீட்டி
நான் கொடுத்தேன் சிறிது நிழல்.....

நெருப்பு வலையத்தில்
நின்று பூத்தாலும்......
எந்தன் நிழ(மட)ல் கண்டால்
அது நித்தமும்
மலர்ந்து நிற்கும்.....

என் பிரியமான தோழியவள்
பாலைவன ரோஜாதான்.....
என் நட்புப் பூங்காவில்
பளிச்சிடும் ஓர் ரோஜாதான்.....
என் மனதில் நண்பியாய்
நான் நட்டுக்கொண்ட ரோஜாச்செடி....
அது நாள்தோறும் மலர்ந்திருக்க
நான் வணங்கிடுவேன் இறைவனடி....


இளங்கவி

4 comments:

  1. நட்பு புரிந்துனர்வுள்ளது , விட்டுக்கொடுப்பது அணைக்கும் கரங்களும் அன்பான இதயமும் உள்ளது. நட்பு ஒரு பொன் சங்கிலி சிறு சலசலப்பு வந்தாலும் மீள உருக்கி ஒட்டி விடலாம் நட்பு வாழ்க.

    ReplyDelete
  2. நிலாமதி அக்காவுக்கு

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

    நட்பு அது எதையும் எதிர்பார்க்காத ஓர் புனிதமான உறவு....

    ReplyDelete
  3. நட்புக்கு நிகர் எதுவும் இல்லை நட்புக்கும் கற்பு உண்டென்பார்கள்...நானறியேன் பராபரமே(lol)

    ReplyDelete
  4. ஈழத்து நிலவு

    மிக்க நநன்றி உங்கள் கருத்துக்கு. நட்பு ஒரு புனிதனமான உறவு....

    ReplyDelete