Friday 26 June 2009

நான் ரசித்த ஊதாப்பூ


பூக்கள் நடந்து வர
வண்டுகள் மறைந்து நின்று
கண்குளிரப் பார்க்கும்
அழகான சோலை; ஆம்
அது ஒரு சாலை.....

அங்கே நானும் ஒர் பார்வையாளன்
இல்லை.. இல்லை..!
பகுதி நேர பங்காளன்....

வழமை போல்
வரிசையாய் பூக்கள் வலம்வர
அதிலே ஊருக்கு புதிசான
ஊதாப்பூ நடந்துவர
என் முழிகள் பிதுங்கும் வரை
அவளை முழுவதுமாய் பார்க்கிறேன்....

என்ன அதிசயம்
முகவரி தொலைத்தவளாய்
என்னிடம் வந்து
இந்த முகவரி தெரியுமா? என்றாள்
ஆமாம் ..தெரியும் என்றேன்
வாயில் நீர் வழிய...!

சட்டென்று அவள் அருகில்
கரு வண்டொன்று
என்ன கோவமா? கொஞ்சம் லேற் என
ச்சீ.. போடா என்றுவிட்டு
அவனைக் கைப்பிடித்து செல்கிறாள்....

என் கண நேரக்காதலி
இந்தப் பொன்வண்டு பார்த்து நிற்க
அக் கருவண்டுடன் செல்கிறாள்...

ஆவென்று வாய் திறந்து
அவள் சென்ற வழி பார்க்கிறேன்
அழகாய் ஓர் வண்டு
என் வாயுள் செல்கிறது....
ஆமாங்க..! நிஜ வண்டு..!
ச்சீ.. கறுமம் ..கறுமம் என்று
அதைக் காறித் துப்பிவிட்டு
என் கடமையைத் தொடர்கிறேன்.....


இளங்கவி

5 comments:

  1. பூவின் நறுமணம் நுகரலாம் பூவின் சொந்தக்காரன் வரும் வரை ........அதன் பின் அவனே சொந்தக்காரன்.

    ReplyDelete
  2. அதுதான் அக்கா கண நேரக்காதலி என்று சொன்னேன்.....

    நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு....

    ReplyDelete
  3. இளங்கவி அருமையான வரிகள்... நல்ல கவிதை.. ஆனால் கடசியில் வண்டு என்று சொல்லி முடித்து விட்டிர்கள்... யார் நீங்கள் ரசித்த கன நேர காதலியோ?

    ReplyDelete
  4. இளங்கவி அருமையான வரிகள்... நல்ல கவிதை.. ஆனால் கடசியில் வண்டு என்று சொல்லி முடித்து விட்டிர்கள்... யார் நீங்கள் ரசித்த கன நேர காதலியோ?

    ReplyDelete
  5. கடைசியில் வண்டு என்று சொன்னது உண்மையான வண்டு சஜி... நான் ஆவென்று சென்றவளை பார்த்து நிற்க வண்டு வாயுக்குள் புகுந்து விட்டது..

    என் கண நேரக்காதலியின் பெயர் எனக்கு தெரியாது! வழியிலே பார்த்து ரசிப்பவளின் பெயரை நான் எப்படிக் கேட்பது... தற்செயலாக செருப்பை கழற்றிவிட்டால்...?

    ReplyDelete