Sunday 28 June 2009

வானவில்


வண்ணங்களின் பூஞ்சோலை
மனதை மகிழ்விக்கும் மாஞ்சோலை
இயற்கை உவந்தளிக்கும்
அழகான ஓர் மாலை.....

எரிக்கும் எதிரிக்கு முன்
எதிரில் நின்று சண்டையிடும்
சதாரண நீர்த்துளிகளின்
வீரத்துக்கு ஒர் குறியீடு....

இயற்கை தந்த
மழலையின் சிரிப்பு....
ஒரு கணமே மகிழ்வித்து
உடனே மறைந்துவிடும்
மனதில் உறைந்த நொடிப்பொழுது......

பக்கத்தில் காதலி; இருந்தும்
பார்வை விலக்கி உனை
பார்க்க வைக்கும்
பகலிலின் பெள்ர்ணமி......

விஞ்ஞானதில்
நிறங்க்களின் ஆராட்சிக்கு
முதலும் நீ முடிவும் நீ......
மனதிலும்
மோகத்தை தூண்டிவிடும்
கவர்ச்சிப் புன்னகை......
மொத்தத்தில்
மனதை மகிழ்வித்து
உடனேயே கொன்றுவிடும்
அழகான கொலைகாரி.....

இளங்கவி

5 comments:

  1. அருமையான வரிகள் யார் அந்த அழகான கொலைகாரி?

    ReplyDelete
  2. சில கணமே வந்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் அந்த நிஜ வானவில் தான் அந்தக் கொலைகாரி என வர்ணித்துள்ளேன்....

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி

    மொத்தத்தில்
    மனதை மகிழ்வித்து
    உடனேயே கொன்றுவிடும்
    அழகான கொலைகாரி.....

    அருமையான வரிகள்

    நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  4. இது நம்ம ஆளுக்கு..

    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு..
    நிச்சயம் விரைவில் உங்கள் website க்கு வந்து நல்லதா நாலுவார்த்தை சொல்கிறேன்....

    ReplyDelete
  5. இய்ற்கை தந்த மழலையின் சிரிப்பு .....அந்த அழகான் எழு வர்ண வான வில்லின் கற்பனை கலந்த வரிகள் அழகு .ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete