Friday 5 June 2009

என் காதலி பேரழகி

கவிதை - இளங்கவி

இருண்ட வானத்தில
அழகாய் ஓர் நிலவு.....
என் இருண்ட வாழ்க்கையிலும்
வந்தாள் ஓர் வெண்ணிலவு......

என் காலையும் அவளானாள்
மாலையும் அவளானாள்
தூக்கம் மயக்கும் இரவினிலே
என் படுக்கையிலே பூவானாள்....

அவளை மானென்று சொல்லமாட்டேன்
நடை தான் மான் அழகு
மீனென்று சொல்லமாட்டேன்
கண் தான் மீன் அழகு
மயிலென்று சொல்லமாட்டேன்
வதனம் தான் மயில் அழகு
குயிலென்றும் சொல்லமாட்டேன்
குரல் தான் குயில் அழகு....

அவள் பலகூட்டம் மான் அழகும்
பல்லாயிரம் மீன் அழகும்
பல நூறு மயில் அழகும்
பல குயிலின் பாட்ட்ழகும்
ஒன்றாகச் சேர்ந்த
பஞ்சு மெத்தை அவள்
பலதரம் சுவைத்தாலும்
சலிக்காத இன்பமவள்....

அவள் ஈழத்தில் இருந்திருந்தால்
செவ்வாளை போல் சுவைப்பாள்
இங்கே இருப்பதினாள்
ஸ்ரோபெரி போல் இனித்தாள்
தேனில் தோய்ந்து கொண்ட
செர்ரிப்பழம் சுவையவள்
தொட்டாலே கை மணக்கும்
தேன் சுவை அன்னாசி....

இரண்டு சேலத்து மாம்பழத்தை
இடைமேலே தாங்கி
அவள் நடந்துவரும் நடைபார்த்தால்
பிணம் கூட வாய் பிளக்கும்
பின்னழகை எடை போட்டால்
வாய் நீரும் வற்றிவிடும்....
முழு அழகை எடைபோட்டால்
மூச்சே நின்று விடும்....

தொட்ட இடமெல்லாம்
இலவம் பஞ்சானாள்
ஓரிடத்தில் மட்டும்
கையை சுட்டுவிடும் நெருப்பானாள்
பனிமலையாக மாறி
என் குளிர் ஜுரம் போக்கிடுவாள்
சமயததில் நெருப்பாக மாறி
கட்டிலையே பொசிக்கிடுவாள்...

இந்தக் குளிரிலே காய்வதற்கு
எனக்கு கம்பிளியாய் நீ வேண்டும்...
அதற்கு காலையிலே எழுந்து
கண்ணாடிமுன் நிற்கவேண்டும்;காரணம்
கண்ணாடியில் நான் ஒட்டிவைத்த
கற்பனையின் விம்பமே
உன்னை நிஜமாக அடைவதற்கு
நான் விண்ண்ப்பம் கோருகிறேன்....

வேண்டியவர் விண்ணப்பிக்க
எண்ணிக்கைக்கு தடையில்லை...
என் கண்ணாடிக் கற்பனைக்கு
குறைந்தாலும் வருத்தமில்லை.....
என் கட்டில் உடைந்தாலும்
புதுக் கட்டில் வாங்கிடுவேன்
என் கண்ணாடி உடைந்து விட்டால்
என் கட்டழகி உடைந்திடுவாள்....


இளங்கவி

4 comments:

  1. ஆமாம் தாங்கள் கண்ணாடி விப்பத்தில் பார்த்த கட்டழகி யாரோ... நல்லா இருக்கு உங்கள் கவிதை.. நல்லாதான் வர்ணித்து இருக்கிறிர்கள் உங்கள் கட்டழகியை பற்றி....

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுஜி, கவிதையென்றால் நிச்சயம் கற்பனை இருக்குமல்லவா? அது தான் கொஞ்ச்சம் அதிகமாக வர்ணித்து விட்டேன்

    ReplyDelete
  3. கற்பனையில் காதல் இழையோடுகிறது அந்த கள்ளி யார் ....உங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளி யார் ? காலப்போக்கில் தெரிந்து விடும்.

    ReplyDelete
  4. அன்புடன் ஆனந்த்
    கவிதைகளை_ வாசிப்பது மட்டும்_அல்ல
    நேசிப்பதும் சுகம்தான்
    ஆமாம்
    நான் நேசிக்கும் அழகான கவிதை_
    உன் நட்பு...

    ReplyDelete